Breaking News
வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி; ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் இதோ
Reporter / 12 Sep 2026 / 0 Comments

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி; ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் இதோ

Business

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கு விற்பனையாகும் நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. நடப்பு மாதத்தின் தொடக்கமான 1-ம் தேதி தங்கம் கிராமிற்கு ரூ.14,175-க்கும், சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனையானது. மறுநாளே கிராமிற்கு ரூ.225 வரை சரிவடைந்து ரூ.13,950-ஆகவும், சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.1,11,600-ஆகவும் சரிவைச் சந்தித்தது. ஆனால், 3-ம் தேதி எதிர்பாராத விதமாக சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920-ஐ எட்டியதுடன், 4-ம் தேதி மேலும் ரூ.960 உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனையானது.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.